"பெற்றோர்களே கவனமா இருங்க!".. குழந்தைகளை தாக்கும் கொரோனா..
Keerthi
3 years ago
இந்தியாவில் தற்போது கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எனவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஒமிக்ரான் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே கொரோனாவால் ஜனவரி 9-ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது